பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது : உற்சாகத்துடன் தேர்வெழுதும் மாணவர்கள்!

TN 12th Examination 2026 Begins in Tamil Nadu : மாற்றுத் திறனாளி மாணவர்கள் தோ்வு எழுதுவதற்கு கூடுதல் ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
TN 12th Exam 2026 Plus 2 public examination begins: Students writing the exam with enthusiasm!
TN 12th Exam 2026 Plus 2 public examination begins: Students writing the exam with enthusiasm!source: google
1 min read

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது

TN 12th Examination 2026 Begins in Tamil Nadu : தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று தமிழ் மற்றும் மற்ற மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம்1.15 மணிவரை நடைபெற்றது.

8.27 லட்​சம் தேர்வர்கள்

தமிழகம் முழு​வதும் உள்ள 7545 பள்ளிகளில் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள், 27,783 தனித் தேர்​வர்​கள், 281 கைதி​கள் என மொத்​தம் 8.27 லட்​சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 3412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தரைத் தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கிரைப் எனப்படும் மாணவர்கள் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 1 மணி நேரம்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக என தோ்வு எழுதுவதற்கு கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

உற்சாகமாக தேர்வெழுதும் மாணவர்கள்

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து

இன்று தொடங்கி இருக்கும் பிளஸ் 2 தேர்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில்,

”இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் .

அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் “என்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in