

சட்டசபை கூட்டம்
Governor R N Ravi walks out of Tamil Nadu Assembly without reading speech : இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், மரபுப்படி ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி அவைக்கு வந்திருந்தார். அவையில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
ஆளுநர் உரை :
அதன் பின்னர், ஆளுநர் தனது உரையுடன் அவை நடவடிக்கையை தொடங்கி வைக்கும்படி அவருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு(TN Governor RN Ravi Walkout) செய்தார்.
தேசிய கீதம் கோரிக்கை
தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும், உரையை வாசித்த முடித்த பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
“நான் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அதை ஏற்காதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பேரவையில் தீர்மானம்
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அரசியலமைப்பு விதிகளை ஆளுநர் தொடர்ந்து மீறுகிறார். பல மாநிலங்களும் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் தொடங்கும் மரபை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவைக் குறிப்பில் பதிவு செய்ய வழிவகை செய்வதற்கான தீர்மானத்தை முதல்வர் முன்வைத்தார். அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வது இது முதன்முறை அல்ல. முன்னதாக 2023ம் ஆண்டு ஆளுநர் ரவி தனது உரையில் அரசு தயாரித்து தந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகளைப் புறக்கணித்தார்.
ஆளுநர் ரவி வெளிநடப்பு
2024ம் ஆண்டு, தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, உரையை வாசிக்காமலேயே வெளிநடப்பு செய்தார். கடந்த ஆண்டும் இதேபோன்று ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்திருந்தார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த ஆண்டும், ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஏன் வெளிநடப்பு செய்தார் என்பதற்கான 10 காரணங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
================