TN பட்ஜெட் : ”வெற்றி” பெயரில் பல அறிவிப்பு திட்டங்கள், மாற்றம் செய்த தவெக : முழு விவரம்..!

தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதில் பல திட்டங்களுக்கு வெற்றி சொல் சேர்க்கப்பட்டு திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 TN Budget: Several schemes announced under the name 'Vetri'
TN Budget: Several schemes announced under the name 'Vetri' ai generated
1 min read

தவெகவின் முதல் பட்ஜெட்

தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு , தமிழக சட்டப்பேரவையில் முதல் பட்ஜெட் தாக்கலானது செய்யப்பட்டது , அதனடிப்ப்டையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது ,நாளை வேளாண் பட்ஜெட்டானது தாக்கல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருக்கிறது

வெளியான பட்ஜெட் அறிவிப்புகள்; சேர்க்கப்பட்ட "வெற்றி" சொல்

நிதியமைச்சர் மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலானது அறிவிக்கப்பட்டது , அதில் பல திட்டங்கள் ஏற்கனவே அதிமுக , திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களேயாகும் , அந்த திட்டத்தில் முன்னர் வெற்றி என்ற சொல்லை இணைத்தும் , பெயர் மாற்றம் செய்தும் தவெக அரசு அறிவித்திருக்கிறது ,

எந்தெந்த திட்டத்திற்கு வெற்றி திட்டம் என்று பெயர் மாற்றம்

அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம் தற்போது வெற்றி மடிக்கணினித் திட்டம் என்றும்

அதைப்போலவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வெற்றி தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும்,

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக மாற்றும் திட்டத்துக்கு வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் என்றும்

ஊரகப் பகுதிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் , வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகளில் வெற்றி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை துணை திட்டமாக வெற்றி 150 திட்டத்துக்கும் வெற்றி 150 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது

முன்னர் ஆட்சியின் செயல்பாட்டில் இருந்து வந்த திட்டத்தினை பெயர் மாற்றம் செய்த தவெக

இதற்கு முன்னர் , மகளிர் விடியல் பயணம் என்பதை மாற்றி மகளிர் பயணம் என்றும் , நான் முதல்வன் திட்டத்தையும் மாற்றி Tn skill development என்று இவ்வாறாக பெயர் மாற்றத்தை மட்டும் செய்திருந்தது

இவ்வாறாக முன்னர் இருந்த திட்டத்தில் வெற்றி சொல்லை இணைத்தும் , பெயர் மாற்றம் செய்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தவெக அரசு.

=================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in