உடல்நலம் குன்றிய மகனை கவனிக்க பணி மாறுதல் கோரிய பேருந்து ஓட்டுநர்: கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!

உடல்நலக் குறைவுள்ள மகனை கவனிக்க கும்பகோணத்திற்கு பணி மாறுதல் கோரிய பேருந்து ஓட்டுநர் முரளியின் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Bus Driver Murali Transfer Request TN Govt Order
TN Bus Driver Murali Transfer Request TN Govt Ordersource:google,ai generated
1 min read

TN Bus Driver Murali Transfer Request TN Govt Order

ஓட்டுநர் முரளியின் கோரிக்கை

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காரைக்குடி பணிமனையில் ஓட்டுநர் உடன் நடத்துனராகப் பணியாற்றி வருபவர் எஸ். முரளி. இவருடைய மகனுக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதால், அவரால் சுயமாக எந்தவொரு காரியத்தையும் செய்துகொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.

இதன்காரணமாக உடல்நலன் குன்றிய தனது மகனை கவனித்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கும்பகோணம் கோட்டப் பணிமனைக்கு ஒருவழி நிரந்தரப் பணி இடமாறுதல் கோரி ஓட்டுநர் முரளி விண்ணப்பித்திருந்தார்.

ஊடகச் செய்தி மற்றும் அரசின் உடனடி நடவடிக்கை

பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் அவர் தெரிவித்திருந்த நிலையில், இவரது நிலை குறித்து செய்திகள் வெளியாகின. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இவரது கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து தற்போது நிறைவேற்றியுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி பணிமனையில் பணியாற்றும் எஸ். முரளி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் பணிமனைக்கு நிரந்தரப் பணி இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இவரது கோரிக்கை கடிதம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, இசைவு கடிதம் பெறப்பட்டு கும்பகோணம் கோட்டத்திற்கு நிரந்தரப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் ஓட்டுநர் முரளி கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த நிலையில், முரளியின் கோரிக்கைக்கு முதல்வர் செவிசாய்த்து நிரந்தரப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

============