

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
தமிழக அமைச்சரவை
கடந்த 10ம் தேதி முதல்வராக விஜயும், 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள். இதையடுத்து அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
40+ வயதை கொண்ட 29 பேர் இடம்பெற்று இருக்கும் இளம் அமைச்சரவை ஆட்சி பொறுப்பேற்றது இதுவே முதன்முறை.
தமிழக அமைச்சர்கள் வயது பட்டியல் :
தவெக அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே 70 வயதை கடந்தவராக உள்ளார்.
தவெக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் வயது 62.
காங்கிரஸ் சார்பில் அமைச்சரான விஸ்வநாதனின் வயது 61.
வேளச்சேரியை சேர்ந்த குமாரின் வயது 60.
முதலமைச்சர் விஜய்க்கு 51 வயதாகிறது
அமைச்சர் ராஜேஷ்குமார் 51 வயதை எட்டியுள்ளார்
அமைச்சர் ஸ்ரீநாத் 52 வயதை எட்டியவர்
அமைச்சர் விஜயலட்சுமிக்கு 50 வயதாகிறது
அமைச்சர் ரஞ்சித்குமாருக்கு 50 வயதாகிறது
அமைச்சர் காந்திராஜ் காந்திராஜ் 52 வயது
அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு 50 வயதாகிறது
அமைச்சர் அருண் ராஜ் 46 வயதாகிறது
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு 42 வயது
அமைச்சர் நிர்மல்குமார் 44 வயது
அமைச்சர் வெங்கடராமணன் 48 வயது
அமைச்சர் பிரபு 41 வயது
அமைச்சர் மரிய வில்சனுக்கு 47 வயதாகிறது
அமைச்சர் மதன் ராஜாவின் வயது 41
அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு 42 வயதாகிறது
அமைச்சர் ராஜ்குமாருக்கு வயது 46
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு 40 வயதாகிறது
அமைச்சர் சம்பத் குமார் 47 வயதை எட்டியவர்
30+ வயது வரம்பில் உள்ள அமைச்சர்கள்
அமைச்சர் ராஜ்மோகனுக்கு 39 வயது
அமைச்சர் தென்னரசு 37 வயதை எட்டியவர்
அமைச்சர் ராஜீவிற்கு 33 வயதாகிறது
அமைச்சர் வினோத்திற்கு 32 வயது
அமைச்சர் விஜய் பாலாஜிக்கு 39 வயதாகிறது
அமைச்சர் ரமேஷ் 31 வயதை எட்டியவர்
அமைச்சர் விக்னேஷ் வயது 38
அமைச்சர் மொஹமது பர்வேஸ் வயது 31
அமைச்சர் சரத்குமார் வயது 34
அவிநாசி தொகுதியில் வென்ற கமலி 28 வயதில் அமைச்சராகி மாநிலத்தின் இளம் அமைச்சராக உருவெடுத்துள்ளார்
சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கீர்த்தனாவிற்கு 29 வயது
=================================