ரூ.4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : ஆவடிக்கு 24 மணி நேரமும் குடிநீர் : முதலமைச்சர் விஜய் அறிவிப்பு...

பொன்னேரியில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், ஆவடிக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்...
TN Cm vijay has announced various schemes fo people in Assembly under 110 rule in water management department
TN Cm vijay has announced various schemes fo people in Assembly under 110 rule in water management departmentAi Generated
1 min read

110-விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு :

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் 110- விதியின் கீழ் பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார் அதில் மிக முக்கியமாக விவசாயிகளின் மீது பதிய பட்ட வழக்குகள் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் போன்ற பலவேறு வழக்குகளை இந்த அரசு ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.

குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வழியில் நடவடிக்கை :

மிக முக்கியமாக சென்னையின் குடிநீர் தேவையை அறிந்து பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் அறிவித்துஇருந்தார்.

அதில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.4,800 கோடி செலவில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஆவடி மாநகராட்சிக்கு சிறப்பு திட்டம் :

குறிப்பாக சென்னை புறநகர் பகுதியாக கருதப்படக்கூடிய ஆவடி மாநகராட்சிக்கு மணி நேரமும் குடிநீர் வழங்க சிறப்பு திட்டமாக ரூபாய்: 500 கோடி செலவில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு அந்த பகுதியில் இருக்க கூடிய மக்களுக்கு கோடை காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நகர்ப்புறங்களை மேம்படுத்த திட்டம் :

குறிப்பாக இந்த அறிவிப்பில் முதல்வர் நகர்ப்புறங்களை மேம்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுபடுத்த நீதி ஒதுக்கீடு :

இந்தியாவின் தென்முனையாக விளங்கும் கன்னியாகுமரி, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களை மையமாகக் கொண்டு சுற்றுலாவை மேலும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படக்கூடிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியை அழகுபடுத்தும் எண்ணத்தில் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்வதாக மதிப்பீட்டில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in