

TN CM Vijay Meets AP CM Chandrababu Naidu River Water Issue
அமராவதியில் முக்கிய சந்திப்பு
ஆந்திர மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று (அக்டோபர் 13) அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநில அமைச்சர்களான நாரா லோகேஷ், விஷ்ணு ரெட்டி, நிம்மலா ராமாநாயுடு, நாராயணா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரை முதல்வர் விஜய்க்குச் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
நதிநீர் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை
தமிழக மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் சந்திப்பில் முக்கிய நதிநீர் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பு
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நதிகள் இணைப்புத் திட்டம்
கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்தும் இரு முதல்வர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கனக துர்கா கோயிலில் தரிசனம்
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க வரவேற்பு
அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனக துர்கா கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய், அதனைத் தொடர்ந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
=========