

TN Co Operative Department Weekly Loan Camps Announcement
கடன் வழங்கும் இலக்கு
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக்கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்தக் கூட்டுறவுத் துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரம்தோறும் சிறப்பு முகாம்கள்
இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
வழங்கப்படும் கடனுதவிகள்
இச்சிறப்பு முகாம்களில் தகுதியான பயனாளிகளுக்கு கீழ்வரும் கடனுதவிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:
நடுத்தர கால விவசாயக் கடன்கள்
ஊரகத் தொழில் கடன்கள்
வீட்டு வசதிக் கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள்
திருநங்கையருக்கான கடன்கள்
மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்கள்
மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைப்பு
இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக்கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
தொடர்புகொள்ள தொலைபேசி எண்
கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நவ.14 : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முதல்வர் விஜய் திட்டம்; 61.84 லட்சம் கேக்குகள் கொள்முதல் செய்ய டெண்டர்!
=========