நேர்மையான, ஊழலற்ற TVK ஆட்சி : இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி மறுபரிசீனை : இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் யோசனை...!

2 தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி இருக்கிறார்.
TN Congress leader Manickam Tagore urged  Left parties to reconsider their decision to contest the by-elections
TN Congress leader Manickam Tagore urged Left parties to reconsider their decision to contest the by-elections google
1 min read

Tamil Nadu Congress leader Manickam Tagore has urged the Left parties to reconsider their decision to contest the by-elections in two constituencies.

2 தொகுதி இடைத்தேர்தல்

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், நாம் தமிழர் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

இடதுசாரிகள் போட்டி

யாரும் எதிர்பாரத விதமாக, தவெக கூட்டணி ஆட்சி ஆதரவு அளித்த இடதுசாரிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு தவெகவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மாலை இடதுசாரிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது.

ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது

இந்த நிலையில் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட உள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதச்சார்பற்ற, நேர்மையான மற்றும் கமிஷன் வாங்காத ஊழலற்ற ஆட்சியை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார்.

கூட்டணியோடு நேர்மையான ஆட்சி

காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர்களும், அரசின் அனைத்து அமைச்சர்களும் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது.

கம்யூ. முடிவு ஆச்சரியமளிக்கிறது

தவெக அரசின் கொள்கைகளுக்கும் சட்டமன்றத்தில் ஆட்சிக்கும் ஆதரவு தரும் இடதுசாரிகள், மக்கள் மன்றத்திலும் இடைத்தேர்தலிலும் தனித்து நிற்பது ஆச்சரியமளிக்கிறது.

முடிவை மறுபரிசீலனை செய்க

இடதுசாரி கட்சிகள் தங்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இருப்பினும், அவர்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in