

இந்து சமய அறநிலையத்துறை
Hindu Religious and Charitable Endowments Department : தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறையாக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்old. 1960ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இது செயல்பட்டு வருகிறது.
11 மண்டலங்களாக செயல்படுகிறது
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக...
இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என, 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
கோவில்கள் நிர்வகிப்பு
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்து வருகிறது.
கூட்டுத்துறையின் கீழ் செயல்பாடு
கடந்த திமுக ஆட்சியில் இத்துறை, ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற கூட்டுத் துறையின்கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்தது.
புதிய ஆட்சி அமைந்ததும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் கீழ் அறநிலையத்துறை இணைக்கப்பட்டது.
தனித்துறையான இந்து சமய அறநிலையத்துறை
இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், பணிகளை துரிதப்படுத்தவும், இது தனித் துறையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக தலைமைச் செயலர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
ராஜராமனிடம் கூடுதல் பொறுப்பு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலராக உள்ள வி. ராஜாராமனிடம் கூடுதல் பொறுப்பாக அறநிலையத்துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய துறை உருவாக்கத்துக்கு ஏற்ப, ‘தமிழ்நாடு அரசு வணிக விதிகள் 1978’-ல் உரிய மாற்றங்கள் விரைவில் செய்யப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மனிதவள மேலாண்மைத் துறை மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் பணிகளை விரைந்து மேற்கொள்ளலாம்
அரசின் நிர்வாக வசதிக்காகவும், கோயில் தொடர்பான பணிகளை விரைந்து செயல்படுத்தவும் புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனித்து இயங்கி வந்த அறநிலையத்துறை ஆணையரகம், இனி புதிய துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
==========