பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ”30 நாட்களில் தீர்வு” : தவெக அரசு அதிரடி, அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
TN govt stern directive to officials, solutions found for petitions submitted by public within 30 days.
TN govt stern directive to officials, solutions found for petitions submitted by public within 30 days.AI generated
1 min read

பொதுமக்கள் கோரிக்கை மனு

The Tamil Nadu government has issued a stern directive to officials, mandating that solutions be found for petitions submitted by the public within 30 days

தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தங்களது கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக தினந்தோறும் பல ஆயிரம் பேர் தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்து வருகிறார்கள்.

புகார் மனுக்கள் மீது உடனே பரிசீலனை

அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளிடம் புகார்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த புகார்களை உடனடியாக சரிபார்த்து தீர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் குறைதீர் கோரிக்கைகள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

30 நாட்களுக்குள் தீர்வு

இதன்படி, ஒவ்வொரு மனுவும் பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து, தேவையான தகவல்களை ஒருங்கிணைத்து, விதிமுறைகளுக்கு ஏற்ப தீர்வு வழங்க வேண்டும்.

மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவு

ஏதேனும் காரணங்களால் அந்த கோரிக்கை அல்லது புகாருக்கு உடனடியாக தீர்வு வழங்க இயலாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெளிவாக அதிகாரிகள் தெரிவிக்கவும், மனுவின் தற்போதைய நிலையை முறையாக புதுப்பித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை முக்கியம்

தேவையின்றி மனுக்களை நிலுவையில் வைப்பது, அலட்சியமாக கையாளுவது அல்லது காலதாமதம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் .

மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

நிர்வாகத்திறன் மேம்பாடு

அரசின் இந்த நடைமுறையால் பொதுமக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு கிடைப்பதோடு, அரசுத் துறைகளின் செயல்திறன் மேம்படும் என்றும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in