

ஜனவரி 15 - பொங்கல் திருநாள்
TN Pongal Special Bus 2026 Date in Tamil : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. புதன்கிழமை (14ம் தேதி) போகிப் பண்டிகை வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால், பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
பொங்கல் சிறப்பு பேருந்துகள்
பொங்கலை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஜன.9 முதல் 14 வரை சிறப்பு பேருந்துகள்
அதன்படி ஜனவரி 9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள்(TN Pongal Special Bus 2026 Date in Tamil) இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
"சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் 1 முன்பதிவு மையம் அமைக்கப்படும்.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
ஜனவரி 09ம் தேதி 1,050 பேருந்துகள்
ஜனவரி 10ம் தேதி 1,030 பேருந்துகள்
ஜனவரி 11ம் தேதி 225 பேருந்துகள்
ஜனவரி 12ம் தேதி 2,200 பேருந்துகள்
ஜனவரி 13ம் தேதி 2,790 பேருந்துகள்
ஜனவரி 14ம் தேதி 2,920 பேருந்துகள்
தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 10,425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
24 மணிநேர கட்டுப்பாட்டு அறை
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம். பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள்
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக ஜன.16 முதல் 19 வரை மொத்தமாக 25,008 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
11 லட்சம் பேர் பயணிக்க வாய்ப்பு
தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் www.tnstc.in என்ற அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் 94440 18898 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் முன்பதிவு செய்யலாம்
====