நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை அறிவித்தப்படி வெளியாகுன் என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது
தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்துக்கொள்வது எப்படி
நாளை (மே 20) காலை 9:30 மணிக்குத் தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் அதனை எவ்வாறு தெரிந்து கொள்ள சில் முக்கிய வழிகளை தெரிந்துக்கொள்ளலாம்
ஆன்லைன் மூலம் எவ்வாறு பார்ப்பது
மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
tnresults.nic.in
dge.tn.gov.in
ஆகிய இணையதளங்களில் தேர்வு பதிவெண்னை உள்ளீட்டு தெரிந்துக்கொள்ளலாம்
எவ்வாறு பயன்படுத்துவது
முதலில் மேலேயுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்குச் நீங்கள் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் இருக்கும் "TN SSLC Result 2026" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் தேர்வுப் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் (Submit), உங்களுடைய மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். அதை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
இரண்வாது வழியாக
இணையதளங்கள் தவிர, digilocker.gov.in அல்லது UMANG செயலி மூலமாகவும் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.
அதற்கு, டிஜிலாக்கர் தளத்தில் உள்நுழைந்து (Login), "Tamil Nadu Class 10 Result 2026" என்பதைத் தேட வேண்டும்.
பின்னர், உங்கள் ரோல் நம்பரை ,அதாவது தேர்வு மதிபெண்ணை உள்ளிட்டு மதிப்பெண் பட்டியலைச் சேமித்துக் கொள்ளலாம்.
கணக்கு இல்லாதவர்கள் மொபைல் எண் மற்றும் ஓடிபி (OTP) மூலம் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
பொதுவாக தெரிந்துகொள்வது
மாணவர்கள் தங்களின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு தேர்வுப் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை சரியாக உள்ளீடவும் , தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்
பொதுவாக அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in, dge.tn.gov.in -ல் தெரிந்துக்கொள்ளலாம்.
இதுவரையிலான பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
இதுவரை வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விவரங்களின் பட்டியல்
2025: 93.80%
2024: 91.55%
2023: 94.66%
2022: 90.07%
2021: 100% (கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்ற ஆண்டு)