தமிழகத்தில் 'வெற்றி வீடு திட்டம்': 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு!

தமிழக ஊரகப் பகுதிகளில் 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 'வெற்றி வீடு திட்டம்' அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
TN Vetri Veedu Scheme 70000 Houses GO Issued
TN Vetri Veedu Scheme 70000 Houses GO Issuedsource: google
2 min read

TN Vetri Veedu Scheme 70000 Houses GO Issued

திட்டத்தின் பின்னணி மற்றும் நிதி ஒதுக்கீடு

தமிழக ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில், 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் முதற்கட்டமாக, 2026-2027 ஆன் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்காக 'வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்துக்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த இத்திட்டத்திற்காக, ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதான் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026-27 முதல் 2030-31-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வீடு கட்டுவதற்கான தகுதிகள் மற்றும் நிதியுதவி

  1. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

  2. குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை சமையலறையுடன் வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அனைத்து வீடுகளும் கட்டாயமாகக் கான்கிரீட் கூரையுடன் அமைக்கப்பட வேண்டும்.

  3. வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் பயணாளிகளின் வசதிக்கேற்ப இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.

பயனாளிகள் தேர்வு மற்றும் முன்னுரிமை

  1. குடிசை வீடுகள், மண் சுவர்கள் மற்றும் உறுதியற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  2. பயனாளிகளைத் தேர்வு செய்ய ஊரகப் பகுதிகளில் மொபைல் செயலி மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

  3. மொபைல் செயலி கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படும் முதற்கட்டப் பட்டியல் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இறுதிப் பயனாளிகள் பட்டியல் ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

  4. முதல் கட்டமாகப் பிரிக்கப்படும் 70,000 வீடுகளுக்கான பயனாளிகளை, ஊரக வளர்ச்சித் துறையிடம் ஏற்கனவே உள்ள வீடற்றோர் பட்டியலிலிருந்தும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கடன் மற்றும் கழிப்பறை வசதிகள்

கூடுதல் நிதி தேவைப்படுவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை 6 சதவீத வட்டியில் சமூக முதலீட்டு நிதிக்கடன் பெறலாம். கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடனும் பெறலாம். இந்த வங்கிக் கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அரசு வழங்கும்.

தனிநபர் கழிப்பறை வசதி இல்லாத தகுதியுள்ள பயனாளிகளுக்குத் தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ் ரூ.12,000 செலவில் தனியாகக் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையில் 5 சதவீதம் மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீடாக இருக்கும். இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

நிதி முறைகேடுகளைத் தவிர்க்க உத்தரவு

ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், வீடுகள் தரமாகக் கட்டப்படுவதையும் உறுதி செய்து, திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அரசுக்குத் தொடர்ச்சியாகச் சமர்ப்பிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

===============