விசில் கொண்டு செல்ல தடை
TVK Symbol Whistle ban’ at T20 World Cup 2026 match in MA Chidambaram Stadium Chepauk Chennai : டி 20 உலககோப்பையானது எம்.ஏ சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் மைதானத்திற்குள் விசில் எடுத்த செல்ல தடை விதிக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
எந்தெந்த பொருட்களுக்கு தடை
ஏற்கனவே மைதானத்திற்குள் வாட்டர் பாட்டில், பவர் பேங்க், குடை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் விசிலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விசில் விற்கவும் தடை
மேலும், மைதானத்தை சுற்றியுள்ள சாலையோர விற்பனைக் கடைகளிலும் விசில்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் இருந்து வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
நிர்வாக தரப்பு தகவல்
மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல அனுமதி மறுப்பும் ,ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பிற்கும் எந்த ஒரு சமந்தமும் இல்லை என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்நிலையில் தற்போது சென்னை எம்.ஏ சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச்செல்ல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. ஏற்கனவே சில பொருட்களின் பட்டியல்களின் வரிசையில் தற்போது விசில் கொண்டு செல்லவும் அதிகாரபூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது .
இதனால் மைதானத்திற்குள் விசில் எடுத்துச்செல்ல ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ரசிகர்களிடையே சந்தேக கேள்வி
வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையத்தால் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது,
இந்தனை ஒட்டி மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா என தமிழக வெற்றி கழக ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.