TNEA 2026 : பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி : சில முக்கியமான வழிகாட்டுதல்கள்!

2026ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்க்கு எவ்வாறு விண்ணப்பிபது என்பன போன்ற முக்கியமான வழிகாட்டுதல்களை இங்கு காண்போம்
TNEA 2026: How to apply for engineering courses, some important guidelines
TNEA 2026: How to apply for engineering courses, some important guidelines google
2 min read

முக்கியமான வழிகாட்டுதல்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) செயல்முறைகள் அனைத்தும் முழுமையாக ஆன்லைன் வாயிலாகத் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அதனை எவ்வாரு விண்ணப்பிபது போன்றக் முக்கியமான படிநிலைகள் , அதனை எவ்வாறு செய்வது போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்

1: பயனர் பதிவு (User Registration)

முதலாவதாக பயனர் பதிவை தேர்தெடுக்க வேண்டும் ,அதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை அளித்து புதிய கணக்கை உருவாக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணிற்கு வரும் ஓ.டி.பி மூலம் விவரங்களை உறுதி செய்வது அவசியம்

2: உள்நுழைவு (Login)

உருவாக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் பாதுகாப்பாக உள்நுழையவும். பிறகு அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கடவுச்சொல்லை யாருடனும் பகிரக் கூடாது இது முக்கியனாதும் கூட

3: தனிப்பட்ட விவரங்கள் (Personal Information)

அதில் கேட்கப்பட்டுள்ள உங்களின் தனிப்பட்ட விவரங்களான ஆதார் எண், வீட்டு முகவரி, பெற்றோர் விவரம் ஆகியவற்றை உங்கள் சான்றிதழ்களில் உள்ளது போலவே பிழையின்றி உள்ளிட வேண்டும் , இது புதிதாக விண்ணப்பிக்கும் முறைக்கு மிகவும் அவசியம்

4: சிறப்பு ஒதுக்கீடு (Special Reservation)

விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வருபவர்கள், அதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுச் சரியான சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும் , இந்த செயல் முறையும் உங்களின் அடுத்தகட்ட கல்விக்கு மிக முக்கியமானதாகும்

5: உதவித்தொகை விவரம் (Scholarship Information)

அடுத்ததாக வருமானச் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை தொடர்பான விவரங்களை உண்மையாக அளிக்க வேண்டும். இது சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க உதவும்

6. கல்வி (மதிப்பெண்) விவரம் (Academic Information)

மதிப்பெண்கள், பதிவு எண்கள் மற்றும் தகுதித் தேர்வு விவரங்களை மிகவும் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்.

இவைதான் உங்கள் தரவரிசையை (Merit List) தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகும்.

நீங்கள் ஒவ்வொரு செமஸ்டர்க்கும் பெற்ற மதிப்பெண்ணை சரியாக உள்ளீட வேண்டும் இது மிக முக்கியமான ஒரு பகுதியாகும்

7: விண்ணப்ப முன்னோட்டம் (Preview)

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். த

வறுகள் இருப்பின் உடனே திருத்தம் செய்துகொள்ளலாம் இதற்கு பின்னர் நாம்மால் எந்த பிழை திருத்தமும் செய்ய இயலாது

8 கட்டணம் செலுத்துதல் (Payment)

பாதுகாப்பான கட்டண வழியைப் பயன்படுத்திப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும். கட்டணம் செலுத்தும் போது பக்கத்தை 'Refresh' செய்ய வேண்டாம்.

ரசீதை மறக்காமல் சேமித்து வைக்கவும். மேலும் பணம் செலுத்தும் போது கவனமாக ஆனைத்தையும் ஒருமுறை சரிபார்த்த பின்பு பணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

இறுதி படிநிலையாக விண்ணப்பித்த படிவத்தை மறக்காமல் பதிவிறக்கம் செய்ய வேண்டும் , அதாவது பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

இதன் நகல்களைக் கலந்தாய்வு மற்றும் TFC மையங்களுக்குச் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும். மேற்கண்ட அனைத்து படிநிலைகளையும் கவனமாக செய்ய வேண்டும்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in