

A new milestone in the history of the Tamil Nadu Electricity Board: 1,472 women qualify in the physical fitness test for the post of Field Assistant!
1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான எழுத்துத் தேர்வில் 5,181 பேர் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், மின்கம்பங்களில் ஏறுவதற்கான சிறப்பு காலணிகளூம் வழங்கப்பட்டன.
முன்னதாக, உடல் தகுதித் தேர்வு நடைமுறைகள் குறித்த விளக்கக் காணொளியும் தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் மற்றும் தேர்ச்சி விவரம்
தமிழ்நாடு முழுவதும் 13 மையங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பங்கேற்றவர்கள்: இத்தேர்வில் 2,752 ஆண் தேர்வர்களும், 2,021 பெண் தேர்வர்களும் பங்கேற்றனர்.
மொத்த தேர்ச்சி: இதில் 2,406 ஆண்களும், 1,472 பெண்களும் என மொத்தம் 3,878 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம்: ஆண்களில் 87.42 சதவீதம் பேரும், பெண்களில் 72.83 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மின்வாரிய வரலாற்றில் புதிய மைல்கல்
குறிப்பாக, தமிழ்நாடு மின்வாரிய வரலாற்றிலேயே முதன்முறையாக 1,472 பெண்கள் கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ”தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும் ‘அக்வான்’ : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை எச்சரிக்கை..!
=============