
ஜூலை 23ம் புதிய உச்சம் :
Gold Rate Today in Tamil Nadu : சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஜூலை 23ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, 75,000 ரூபாயை தாண்டி, 75,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பின், விலை படிப்படியாக குறைந்தது.
நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம், 9,370 ரூபாய்க்கும், சவரன், 74,960 ரூபாய்க்கும் விற்றது(One Sovereign Price Update). நேற்று ஒரு சவரன் 75,040 ரூபாய்க்கு விற்பனையானது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை :
இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக, சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,400க்கு விற்பனை ஆகிறது.தங்கம் விலை முதல்முறையாக, புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.75,200 விற்பனை(One Sovereign Gold Price Today Update) செய்யப்படுகிறது.
மேலும் படிக்க : Gold Rate : 75,000ஐ தாண்டியது தங்கம் விலை : வரலாறு காணாத உச்சம்
பாதுகாப்பான முதலீடு தங்கம் :
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் வாங்கி சேமிப்பது பொதுமக்களின் வழக்கம். இதன்காரணமாகவே, உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஆனால், சர்வதேச பொருளாதார நிலை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
====