Today Gold Rate : புதிய உச்சத்தில் தங்கம் : ஒரு சவரன் ரூ. 81,200

Today Gold Rate in Chennai : தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு, சவரன் 81,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Today Gold Rate in Chennai
Today Gold Rate in Chennai
1 min read

தொடர் உச்சத்தில் தங்கம் :

Today Gold Rate in Chennai : அமெரிக்காவின் வரி போர், உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஓரிரு நாட்கள் விலை சற்று குறைந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் மறுநாள் புதிய உச்சத்தை எட்டி விடுகிறது.

ரூ.81,000 தொட்ட தங்கம் :

அந்த வகையில் இன்று தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு அதிர்ச்சியை அளித்து இருகிறது. சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து சவரன் ரூ.81,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,150 ஆக உள்ளது(Per Gram Gold Rate Today). கடந்த 24 மாதங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு (2025) மட்டும் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

விரைவில் சவரன் ரூ.1 லட்சம்? :

இப்போதைய சூழலில் தங்கத்தின் விலை இதே ஏறுமுகத்தில் சென்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று வர்த்தகர்களும், பொருளாதார ஆலோசகர்களும் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி கிராம் ரூ.140 :

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.140 ஆகவும்(Silver Rate Today), ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.40 லட்​ச​மாக​வும் இருக்கிறது.

5 நாட்களில் தங்கம் விலை(Gold Rate Last 5 Days) :

08-09-2025 - சவரன் ரூ. 80,480

07-09-2025 - சவரன் ரூ. 80,040

06-09-2025 - சவரன் ரூ. 80,040

05-09-2025 - சவரன் ரூ.78,920

04-09-2025 - சவரன் ரூ.78,360

மேலும் படிக்க : Gold Rate Today : சவரன் ரூ.80,000, கிராம் ரூ.10,000 : புதிய உச்சம்

5 நாட்களில் வெள்ளி விலை(Silver Rate Last 5 Days) :

08-09-2025 - ஒரு கிராம் ரூ.140

07-09-2025 - ஒரு கிராம் ரூ.138

06-09-2025 - ஒரு கிராம் ரூ.138

05-09-2025 - ஒரு கிராம் ரூ.136

04-09-2025 - ஒரு கிராம் ரூ.137

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in