இட்லியை கொண்டாடும் கூகுள்..! வாழை இலையுடன் வைரலாகும் டூடுல்!

Today Google Doodle Celebrating Idli in Tamil: தென்னிந்திய உணவான இட்லியை வாழை இலையுடன் சேர்த்து கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. ஆவி பறக்கும் இட்லியுடன், வடை, சாம்பார், சட்னி என வைரலாகும் டூடுல்.
Today Google Doodle Celebrating Idli with Banana Leaf in Tamil
Today Google Doodle Celebrating Idli with Banana Leaf in Tamil
1 min read

இட்லியின் பங்களிப்பு :

Today Google Doodle Celebrating Idli with Banana Leaf : தென்னிந்தியாவின் உணவு முறைகளில் இட்லியின் பங்களிப்பு இன்றியமையாதது. விலை மலிவில் இருந்து, சுவை வரை ஊட்டசத்தும் கிடைப்பதால் இதன் சுவை பிரியர் உலகளவில் ஏராளமானோர். அதிலும் காலை உணவு என்றால் முதல் வேலையாக நினைவுக்கு வருவது, எளிதில் ஜீரணிக்கப்பட்டு எளிமை உணவாக இருக்கும் இட்லிதான்.

கூகுளின் டூடுல்

தொடர்ந்து கூகுள் பலவித கொண்டாடங்கள், முக்கிய நாட்களில் தனித்துவமான டூடுலை வெளியிட்டு கூகுள் பயனாளிகளை குஷிப்படுத்தும். இதன்மூலம் சில நேரங்களில் மூலை முடுக்கில் உள்ள அனைத்து விசயங்களையும் நாம் கூகுளின் டூடுல் வழியாகத்தான் அறிந்துகொள்வோம்.அதன்படி, இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் மிகவும் தனித்துவமானது என்றே சொல்லலாம்.

வாழை இலையுடன் இட்லி

அதற்கு காரணம் நம் பாரம்பரிய உணவில் தவிர்க்க முடியாத ஆவி பறக்கும் இட்லியை வாழை இலையுடன் வெளியிட்டுள்ளது. அரிசி, உளுந்து பருப்பில் அரைத்து, ஆவியில் வேக வைத்து உணவாகும் இட்லிக்கு அப்படி ஒரு மகத்துவம் என்பதால், யாரும் எதிர்பார்க்காத டூடுலை கூகுள் வெளியிட்டு அசத்தியுள்ளது.

மேலும் படிக்க : ஆஃப் ஸ்டோரில் முதல் இடத்தில் உலா! இனி ஜோஹோதான் முதலிடம்!

இட்லியில் பெயர் வைத்துள்ள கூகுள்

அப்படி கூகுள் வெளியிட்டுள்ள வாழை இலையுடன் கூடிய டூடுலில், கூகுள் என்ற பெயர், இட்லி உருவாகும் அரிசி, பருப்பில் இருந்து ஆரம்பமாகி, பின்பு மாவாகி, ஆவி பறக்கும் இட்லியாகி, சட்னி, சாம்பார் வடையுடன் இறுதியாக கடிக்கப்பட்ட அரை இட்லியாக காட்சியளிக்கிறது. இட்லி முறையையே கூகுள் ஒரு வாழை இலையில் தனது பெயருடன் டூடுலில் வெளியிட்டுள்ளது, உலகம் முழுவதும் உள்ள அனைத்து டிஜிட்டல் கூகுள் பயனாளிகளின் கண்களுக்கு திரையின் வழியாக இட்லி விருந்தளித்துள்ளது. இந்த டூடுலை கூகுள் பயனாளிகள் ஷேர் செய்து அரட்டை அடித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in