திருச்சி கிழக்கு : விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் : தவெகவில் ஐக்கியம் : EPSக்கு அடுத்த அதிர்ச்சி...!

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட, ராஜசேகரன் தவெகவில் இணைந்து இருக்கிறார்.
Trichy East: Candidate who contested against Vijay joins TVK.
Trichy East: Candidate who contested against Vijay joins TVK. google
1 min read

விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் தவெகவில் ஐக்கியம்

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணைந்துள்ளார்

நிலையில், ‘மனவலியுடன் விலகுவதாக’ எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஓன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் ,அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள். மக்கள் நலன் குறித்த எனது பார்வை. எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி,

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த,ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், இன்றைய தினம் முதல் மனவலியுடன் விலகுகின்றேன் என்று கடிதத்தி குறிப்பிட்டுள்ளார்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்

இதுவரை அதிமுகவில் இருந்து விலகி தவெகவிற்கு செல்லும் எம்.எல் .ஏக்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர் இந்த கட்சி விலகல் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது

எடப்பாடிக்கு மேலும் பின்னடைவு

ஏற்கனவே அதிமுக எம்,ஏல் ஏகள் ஆன மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா , இசக்கி சுப்பையா ஆகியோர் சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜினாம செய்திருந்தனர்

இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்,ஏல் ஏ வான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி எம்,ஏல் ஏ எம் . ஆர் விஜ்யபாஸ்கர் ஆகியோர் தனது பதவியை ராஜினாம செய்துள்ளன்ர் , இதன் மூலம் அரசியலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்திதுள்ளது

விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்த்ல்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக் உய்ர்ந்து இருக்கும் நிலையில் , ஏற்கனவெ திருச்சி தொகுதியில் முதல்வர் விஜய் ப் ராஜினாம செய்திருந்தார்

இந்த நிலையில் இந்த 7 தொகுதிகளையும் , காலியான தொகுதியாக பேரவை தலைவர் அறிவித்திருந்தார் , விரைவில் இப்பகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in