

Political Leaders Criticized Vijay Dance in TVK 3rd Anniversary :
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் சிறிது நேரம் நடனமாடி, கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
கரூர் விவகாரத்தில், எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து பின்னர் வீடியோ வெளியிட்ட விஜய், தற்போது நடனமாடி இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.
அமைச்சர் ஐ. பெரியசாமி
சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் ,கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் நடனம் போடுகிறார் விஜய் என்று கூறியுள்ளார் .
நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் ஆடினால் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்றும் அவருக்கு அரசியலே தெரியாது என்று நினைக்கிறன்,
ஒரு தலைவர் கட்சி விழாவில் நடனம் ஆடுகிறார் இதுதான் கட்சி தலைவரின் அடையாளமா என்றும் நயினார் விமர்ச்சித்துளளார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கரூரில் 41 உயிர்கள் பறிபோன குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் கட்சி கூட்டத்தில் நடனம் ஆடுகிறார்,அந்த குடும்பங்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ிஇருக்கிறார் ,இவர் அரசியலில் இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் என்று விமர்ச்சித்துள்ளார் .