

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம்
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 17-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்கு சதவீத விவரங்கள்!
முன்னிலை வகிக்கும் கட்சிகளின் வாக்கு விவரம்
தமிழக வெற்றிக் கழகம்
இத்தேர்தலில் 34.92% வாக்கு சதவீதத்தைப் பெற்று தவெக முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,72,26,209 வாக்காளர்கள் அக்கட்சிக்குத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம்
2021 ஆம் ஆண்டுமுதல் ஆளுங்கட்சியாக இருந்த திமுக 24.19% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 1,19,29,144 வாக்குகள் கிடைத்துள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக 21.21% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 1,04,62,146 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
பிற கட்சிகளின் நிலவரம்
நாம் தமிழர் கட்சி
சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் கவனத்தைப் பெற்று 4.00% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 19,72,537 பேர் வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸ்
தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் 3.37% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 16,61,312 பேர் வாக்களித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி
தமிழகத்தில் பாஜக 2.97% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 14,67,024 வாக்குகள் பேர் வாக்களித்துள்ளனர்.
தேமுதிக மற்றும் விசிக
தொடர்ந்து தேமுதிக 1.20% வாக்குகளையும் (5,89,500 வாக்குகள்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) 1.09% வாக்குகளையும் (5,40,056 வாக்குகள்) பெற்றுள்ளன.
தமிழக அரசியலில் முக்கியத் திருப்பம்
தமிழகத்தில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைத் தகர்த்து, தவெக ஒரு மிகப்பெரிய மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது இத்தேர்தலின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இப்பெரும் வெற்றியானது தமிழக மக்களின் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
=====