வெள்ளை அறிக்கை : TVK vs DMK : திட்டங்களை நிறைவேற்றினால் கடன் 20 லட்சம் கோடியாகும் : தங்கம் தென்னரசு கணிப்பு, சவால்...!

தமிழகத்தின் கடன் சுமை 13.18 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாக தவெக குற்றம் சாட்டிய நிலையில், ஐந்து ஆண்டு ஆட்சி முடிவில் கடன் இருமடங்காவது இயல்புதான் என திமுக பதிலடி கொடுத்துள்ளது.
TVK alleged TN'debt burden risen to ₹13.18 lakh crore, DMK hit back, debt double by end of a five-year term is natural
TVK alleged TN'debt burden risen to ₹13.18 lakh crore, DMK hit back, debt double by end of a five-year term is naturalgoogle
1 min read

தவெக - திமுக இடையே மோதல்

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பது மாநில அரசின் கடன் விவகாரம் மற்றும் வெள்ளை அறிக்கை. திமுக மற்றும் தவெக இடையே வெடித்துள்ள இந்த விவகாரம், மாநிலத்தின் கடன் சுமை உயர்வு, அதற்கு யார் பொறுப்பு என்ற விவாதத்தை முன்வைத்து வருகிறது.

தவெக அரசின் வெள்ளை அறிக்கை

* திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்பாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் அளவு சுமார் 4.8 லட்சம் கோடி

* திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்த கடன் சுமை இருமடங்காக அதிகரிப்பு

* தற்போது கடன் அளவு 13.18 லட்சம் கோடியாக விஸ்வரூபம்

* தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் சராசரியாக 1.28 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்றம், என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு திமுக அரசில் நிதி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

* வெள்ளை அறிக்கை என்ற பெயரில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தவெக முயற்சி

* கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள காரணம் தேடுகிறது

* திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தவெக முடக்கப் பார்க்கிறது

* ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தின் கடன் இருமடங்காக உயர்ந்தது

* ஒரு ஆட்சி நிறைவடையும் போது முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் கடன் அளவு இருமடங்காவது என்பது வழக்கமான ஒரு பொருளாதார நடைமுறை

* தவெக அரசு திமுகவின் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி, தங்களுடைய புதிய திட்டங்களையும் நிறைவேற்ற முடியுமா?

* திமுக வாங்கிய கடனை விடக் குறைவான கடனுடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து காட்டிவிட்டால், அரசியல் பொறுப்பிலிருந்து விலகத் தயார்

* ஐந்து ஆண்டுகள் கழித்து தவெகவின் ஆட்சி முடியும் போது, , தமிழகத்தின் மொத்த கடன் அளவு 20 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும், என்றும் தங்கம் தென்னரசு கணித்துள்ளார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in