

கட்சிகளின் கூட்டணி நிலவரம்
TVK Application for TN Election 2026 in Panaiyur : வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் பல்வேறு முறைகளில் மக்களிடம் தங்களை முன்னிறுத்தி, கட்சியை பலப்படுத்தவும் கூட்டணிகளை இணைக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஒருசில கட்சிகள் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில், சில கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளிவராமல் இருப்பது, தமிழக அரசியல் களத்தில் வெற்றியை கணிப்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
விருப்ப மனுவை பெற குவியும் கூட்டம்
இந்நிலையில், ஒரு சில கட்சிகள் தங்களின் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து விரும்ப மனு பெறலாம் என்று முடிவு செய்து பின்னர், கூட்டணி குறித்தும் கட்சியின் முடிவுகள் ஆகியவை குறித்தும் அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, தவெக கட்சி பல பின்னடைவுகளுக்கு பின், கட்சி பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தனர். ஆனால், இன்றுவரை கூட்டணி குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் உள்ள நிலையில், விருப்ப மனு முறையை அனுகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பனையூரில் குவியும் கூட்டம்
தமிழக அரசியல் களம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
14ம் தேதி வரை விருப்ப மனு
விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ. 100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
குவியும் கூட்டத்தால் பொதுமக்கள் அவதி
பனையூரில் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். மனுவில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பனையூர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனுக்களைப் பெற நிர்வாகிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்களில் சிலர் புகார் தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து விருப்ப மனு பெரும் கூட்டம் அதிகரித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.