TVK Candidate List 2026 : நாளை மறுதினம் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! நேரடியாக அறிவிக்கும் விஜய்?

TVK Vijay Announced TVK Candidate List 2026 : தவெக, முதற்கட்டமாக 117 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளது.
TVK Candidate List 2026 : TVK leader Vijay to announce TVK's first list of candidates the day after tomorrow
TVK Candidate List 2026 : TVK leader Vijay to announce TVK's first list of candidates the day after tomorrow source : google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

TVK Vijay Announced TVK Candidate List 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

அதன்படி நாளை மறுதினம் (வரும் மார்ச் 27-ஆம் தேதி) மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.

தேர்தல் களத்தில் விஜய்

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில் அமைதி காத்து வரும் விஜய், தற்போது நேரடியாக தேர்தல் களத்தில் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தவெக, முதற்கட்டமாக 117 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நாளை மறுநாள் வெளியிட உள்ளது.

117 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்

இதுவரை சுமார் 120 பேருக்கு நேரடி நேர்காணல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதில் முதன்மையானவர்களைத் தேர்வு செய்து 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேட்பாளர்கள் நேரடி அறிமுகம்

மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த அறிமுகக் கூட்டத்தில் விஜய் நேரடியாகக் கலந்து கொண்டு வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளார்.

தொண்டர்கள் உற்சாகம்

மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடுகளில் பிஸியாக இருக்கும் வேளையில், தவெக தனது முதல் கட்டப் பட்டியலோடு களமிறங்குவது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசுவாரா விஜய் ?

மேலும் இதுவரை பொதுவெளியில் தேர்தல் குறித்துப் பேசாத விஜய், இந்த மேடையில் தனது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in