யாருடன் கூட்டணி? DMK or TVK : ராகுல் காந்தியுடன் காங். தலைவர்கள்..

TVK Congress Alliance 2026 : தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய, தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
TVK Congress Alliance 2026 71 district leaders of the Tamil Nadu Congress Party are holding consultations in Delhi to finalize their alliance in Tamil Nadu.
TVK Congress Alliance 2026 71 district leaders of the Tamil Nadu Congress Party are holding consultations in Delhi to finalize their alliance in Tamil Nadu.Google
2 min read

அனல் பறக்கும் தேர்தல் களம்

TVK Congress Alliance 2026 : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணியை இறுதி செய்ய திமுக, அதிமுக மும்முரம் காட்டி வருகின்றன. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் இறங்குவதால், கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் உள்ளது.

கூட்டணி - முழுவீச்சில் அதிமுக

மார்ச் முதல் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடிக்க அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.

திமுக கூட்டணி - உள்ளே, வெளியே!

திமுக கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல தெரிந்தாலும், காங்கிரசுக்கு விஜய் மறைமுக அழைத்து விடுத்து இருப்பதாக கூறப்படுவதால், பதற்றம் அதிகரித்துள்ளது. தவெக கூட்டணி பற்றி காங்கிரசில் சிலர் வெளிப்படையாக பேசினாலும், அதை தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ கட்சித் தலைவர் ஆர்வம் காட்டவில்லை. இது திமுகவிற்கு சந்தேகத்தை அதிகரிக்க செய்து இருக்கிறது.

ராமதாசை எதிர்க்கும் திருமா

இன்னொரு பக்கம் ராமதாஸ் உள்ளே வந்தால், விசிக வெளியேறும் என்பதில், திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதுவும் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் எதிர்பார்ப்பு, திமுக மறுப்பு

தமிழக காங்கிரசை பொருத்தவரை, கூடுதல் இடங்கள் அதாவது 36 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தை சுயாட்சி என்பதில் திமுக பிடிவாதமாக உள்ளது. 2021 போலவே காங்கிரசுக்கு 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக தலைமை விரும்புகிறது.

தவெகவை விரும்பும் காங்கிரஸ்

விஜயின் தவெகவிற்கு சென்றால் காங்கிரஸ் 60 இடங்களை வரை கூட போட்டியிடலாம், ஆட்சியில் பங்கு துணை முதல்வர் பதவியும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்

இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் பெண்கள். இதன் காரணமாக வழக்கம் போல காங்கிரசில் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது.

காங்கிரசில் கோஷ்டி மோதல்

மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்களுக்கும், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை புகைந்து வருகிறது.

மாவட்ட தலைவர்களை சந்திக்கும் ராகுல்

இந்தச் சூழலில் 71 மாவட்ட தலைவர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.

இன்று மதியம் டெல்லி இந்திரா பவனில் ராகுல் காந்தி, கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

யாருடன் கூட்டணி - ஆலோசனை!

இக்கூட்டத்தில் 2026 தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடரலாமா அல்லது மாற்று வியூகங்கள் உள்ளனவா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்படுகிறது.

தொண்டர்கள் மனநிலை என்ன?

கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்துத் தொண்டர்களின் மனநிலை என்ன? தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸின் தற்போதைய பலம் என்ன? போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி நேரடியாக விவாதிக்க இருக்கிறார்.

இறுதி முடிவெடுக்கும் காங்கிரஸ்

ராகுல் காந்தியின் இந்த நேரடித் தலையீடு, தமிழக காங்கிரஸ் கட்சியை தேர்தல் களத்திற்குத் தயார் செய்யும் ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவினை பொருத்தே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது தெரிய வரும்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in