TVK அரசின் நலத்திட்டங்கள் : மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! : மகளிர் உரிமைத்தொகை ரு.1000? (அ) ரு.2,500?...

திமுக அரசின் நலத்திட்டமான மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 ரூபாய் தவெக அரசிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
TVK government also credited Rs. 1,000 to students, a welfare scheme
TVK government also credited Rs. 1,000 to students, a welfare scheme
1 min read

திமுக அரசின் நலத்திட்டங்கள்

திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்

அரசுப் பள்ளிகளில் படித்து, அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000

மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

நலத்திட்டங்கள் தொடரும்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சிகளில் கொடுக்கப்பட்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று உறுதியளித்தார்.

நிறைவேற்றிய தவெக அரசு

அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் முதல் உதவித்தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகை, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 3 மாதங்களுக்கு சேர்த்து வரவு வைத்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஆனாலும் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின்கீழ் மாதாமதாம் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது இரு திட்டங்களின் கீழும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை

மாதம் 15ம் தேதி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. நாளை 15ம் தேதி இந்த உரிமைத்தொகை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரவு ரூ.1000 அல்லது ரூ.2,500?

திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுமா? அல்லது தவெக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி 2,500 ரூபாய் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in