

தமிழக அரசின் நிதி நிலைமை
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார்
கஜானா காலி - முதல்வர் குற்றச்சாட்டு
பதவியேற்ற அன்றே தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாக விமர்சித்த விஜய், விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளது.
வெள்ளை அறிக்கை - இன்று வெளியீடு
நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் வரவு - செலவு கணக்குகள், கடன்கள், முந்தைய திமுக அரசின் நிர்வாக செயல்பாடுகள் ஆகிய விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம் பெற்று இருக்கும்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்
மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை, அரசு பேருந்துகளில் இலவச பயணம், விவசாய கடன்கள் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை பிரசாரத்தின் போது விஜய் அறிவித்து இருந்தார்.
பொருளாதார சார்ந்த இந்த திட்டங்களை அரசின் நிதி நிலையை வைத்தே விரைவாக நிறைவேற்ற முடியும். எனவே, அரசின் நிதி தொடர்பான வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புதிய அறிவிப்புகள் - கூட்டத்தொடரில் வெளியீடு
நிதியை பெருக்கும் வழி வகைகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில், சட்டமன்ற கூட்டத் தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்.
மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய், மாணவர்களுக்கு நிதியுதவி, குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் போன்ற அறிவிப்புகள் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
=====================