Tasmac : ”கட்சி நிதிக்கு செக், ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் : தவெக அரசு மாஸ்டர் பிளான் : ஊழலுக்கு முற்றுப்புள்ளி...!

டாஸ்மாக் மூலம் கட்சி நிதிக்கு பணம் போவதற்கு செக் வைத்திருக்கும் தவெக அரசு, 1,200 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட அதிரடி காட்டி இருக்கிறது.
TVK govt, check on money going to party funds through TASMAC,  taking action to generate additional revenue crore
TTVK govt, check on money going to party funds through TASMAC, taking action to generate additional revenue google
1 min read

அரசுக்கு கூடுதல் வருவாய்

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் பானங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், மாநில அரசுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

இதன் மூலமாகவே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 4,765 சில்லறை மதுபானக் கடைகள் கடந்த ஆட்சியில செயல்பட்டு வந்தன.

முதல்வராக பொறுப்பேற்ற உடன் விஜய், பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 கடைகள் மூட உத்தரவிடப்பட்டார். இதனால் டாஸ்மாக் கடைகள் 4,048 ஆகக் குறைந்துள்ளது.

மாதம் ரூ.4,000 கோடி வருவாய்

டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுப்பட்டு வருகிறது. பண்டிகை தினங்களில் ஒரு நாள் வசூல் 200 கோடியை தாண்டும்.

சராசரியாக மாதம் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

மது பெட்டிகளுக்கு கூடுதல் வசூல்

பல வருடங்களாக, மது உற்பத்தியாளர்களிடமிருந்தும் (Distilleries) மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் ஒவ்வொரு மதுப் பெட்டிக்கும் (Case) முறையே 90 ரூபாயும், பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிக்கு 20 ரூபாயும் தனிநபர்களால் சட்ட விரோதமாகப் பெறப்பட்டு வந்தது.

கட்சிகள் கையில் சிக்கிய நிதி

ஆண்டுக்குச் சுமார் 88 லட்சம் மதுப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுவதால், இதன் மூலம் பெறப்பட்ட தொகை, ஆயிரக்கணக்கான கோடிகளாகத் தனிநபர்கள் கைகளிலும், தனிக்கட்சிகளின் கைகளிலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கைகளிலும் சிக்கியிருந்தது.

இனி அரசு கஜானாவுக்கு பணம்

இதனை மாற்றியமைக்கும் பொருட்டு, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் அந்தப் பணம் முழுமையாக அரசு கஜானாவிற்கு மட்டுமே வரவு வைக்கப்படும். ‘இந்தப் பணம் முற்றிலும் எனது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும்’ என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் அதிரடி

இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கையை எடுக்க முயற்சிக்கவே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும், தங்களுக்கான நிதி திரட்டலையே கவனமாக செய்து வந்தன. இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுத்து விட்டது.

மக்கள் பணம் மக்களுக்கே...

இப்படி யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக வரும் கோடிக்கணக்கான பணம், மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் திட்டவட்டமாகக் கூறியதால் தான், உடனே அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஊழலற்ற நிர்வாகம் சாத்தியமே!

ஒட்டுமொத்த அரசுத் துறைகளிலுமே ஊழல் இல்லாத ஒரு தூய்மையான நிர்வாகத்தை உருவாக்கி, தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக, இப்படி பிரச்னைகளை கண்டறிஞ்சு, களை எடுக்க ஆரம்பித்தால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பது என்பது முடியாத காரியமல்ல.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in