TN Assembly elections : தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் : விஜய் முன்னிலையில் நேர்காணல்!

TVK Vijay Video Conference with Candidates : தமிழக சட்டமன்ற தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வருகிறார்.
TVK leader Vijay conducting interviews with who submitted their applications to contest on behalf of Assembly elections
TVK leader Vijay conducting interviews with who submitted their applications to contest on behalf of Assembly electionsgoogle
1 min read

தமிழக தேர்தல் களம்

TVK Vijay Video Conference with Candidates : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்த இருக்கின்றன.

நாம் தமிழர் கட்சி

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி, பிரசாரத்தில் மும்முரம் காட்டத் தொடங்கி இருக்கிறது.

தயாராகும் தவெக

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தவெகவும் தயாராகி வருகிறது. இதையொட்டி 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை தவெக பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தன.

தவெக சார்பில் நேர்காணல்

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இன்று முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விஜய் முன்னிலையில் நேர்காணல்

காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. தவெக தலைவர் விஜய் நேர்காணலில் பங்கேற்று, விருப்பமனு அளித்தவர்களிடம் பேசி வருகிறார்.

முதல் நாள் நேர்காணலில் யார், யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

தவெக நிர்வாகிகள் பங்கேற்பு

நேர்காணலை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யுடன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் நேர்காணலை நடத்தி வருகிறார்கள்.

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ வழக்குக்காக விஜய் இன்று டெல்லி செல்ல இருந்த நிலையில், நேர்காணலை ஒட்டி அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக விஜய் தரப்பில் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டு இருக்கிறது.

என்டிஏ கூட்டணியில் தவெக?

என்டிஏ கூட்டணிக்கு தவெக செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச்சூழலில், தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in