

டிஜிபி அலுவலகத்தில் விஜய் மனு
Ponraj on TVK Vijay : அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக பெண் ஆதரவாளர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதற்கு, தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்ததோடு, டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
செங்கோட்டையன் விளக்கம்
இதைத்தொடர்ந்து இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்திருப்பதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பொன்ராஜ்க்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
முன்னதாக பொன்ராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவஎக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .
திமுகவின் கைக்கூலி
அந்த பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
நடவடிக்கை எடுக்காத திமுக
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி என்று பதிவில் கூறியுள்ளார்.
பொன்ராஜ் எக்ஸ் பதிவு
இதற்கு பொன்ராஜ் தனது எக்ஸ் பதிவில் பதில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில், காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆதாய சூதாடி நீங்களா? நானா?
ஆனால் மற்றுமொறு பதிவில், நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? என்றும் எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மண்ணிப்புகேளுங்கள்.
விஜய் மன்னிப்பு கேட்டால் நான்?
மேலும் உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்கள் கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு விஜய் மன்னிப்பு கேட்டால், தனது சொல்லால் காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்பேன் என்றும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தீய சக்தி
======