விவசாயி குழந்தைகளின் படிப்பு செலவு அரசு ஏற்கும்: பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்,பயிர்க்கடன் ரத்து : விஜய் வாக்குறுதி

விவசாயிகளின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை அரசே ஏற்கும் உள்ளிட்ட வாக்குறுதிகள் தவெக தலைவர் விஜய் வழங்கி இருக்கிறார்.
TVK leader Vijay made promises, government will bear the educational expenses of farmers' children
TVK leader Vijay made promises, government will bear the educational expenses of farmers' childrengoogle
1 min read

தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அளித்த வாக்குறுதிகளை பார்ப்போம்...

* தவெக ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

* 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வதற்கும்...

* 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை

* திமுக போல் எல்லாருக்கும் என்று சொல்லிவிட்டு, பின் தகுதி நிர்ணயம் செய்து ஏமாற்றாமல் அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வோம்.

* 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்களாக யாரும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்...

* அவர்களின் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வித படிப்புகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

* விவசாயிகளுக்கு நலனுக்கு எதிராக உள்ள திட்டங்களை, மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும் தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.

* கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் முறையாகப் பாதுகாக்கப்படும். நெல் மூட்டைகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளும்.

* போதுமான கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மீறினால் கடும் நடவடிக்கை

* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும்.

* கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்குப் பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.

* ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

* மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை தவெக அரசு கொடுக்கும்.

* கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்காக நம் அரசு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும்.

* அரசு வேலைவாய்ப்புகள், தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தாலே, நம் இளைஞர்கள் அவர்களது வழியை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

* கோடிகளில் ஒப்பந்தம் என்று விளம்பரம் மட்டும் செய்யாமல், உண்மையான ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதைச் செயல்படுத்தினாலே எல்லாம் தானாக நடக்கும்.

* தவெக ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியைக் கொடுக்க முயன்றாலே போதும் எல்லாம் நன்றாக நடக்கும்

என்று தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் வாக்குறுதி அளித்தார்.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in