ஐந்து மாநில தேர்தல்
இந்தியாவில் ஐந்து மணிலா தேர்தலுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , அதற்கான தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது, தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளியாகிறது
தனித்து போட்டியிடும் தமிழக வெற்றி கழகம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி க/கம் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.விஜயின் அரசியல் வருகையால் தமிழகத்தில் நன்கு முனை போட்டி நிலவுகிறது.
விஜய்யின் ஆன்மிக வழிபாடு
தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் , விஜய் ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார் .
அதன்படி நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சத்ரு சம்ஹார பூஜையும் நடத்தினார்.
பலமுறை சீரடி சென்று வழிபடும் விஜய்
இன்று மட்டுமல்லாது , இதற்கு முன்னர் பலமுறை சீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர்.
கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.
================