”கரூர் வழக்கு” தமிழ்நாட்டில் விசாரிக்க வேண்டும்! : சிபிஐயிடம் விஜய் கோரிக்கை

TVK Vijay on Karur : த.வெ.க தலைவர் விஜய், தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு கரூர் விபத்து வழக்கின் சி.பி.ஐ விசாரணையை டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டுமென கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார் .
TVK Leader Vijay requests CBI to investigate Karur case in Tamil Nadu itself
TVK Leader Vijay requests CBI to investigate Karur case in Tamil Nadu itselfSource : Google
1 min read

கரூர் வழக்கு -விஜய் சிபிஐ-டம் கோரிக்கை

TVK Vijay requests CBI to investigate Karur case in Tamil Nadu : கரூர் த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் இது தொடர்பாக மத்திய மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ- அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு விஜய் விசாரணையை டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளார் .

வழக்கு விசாரணை

கரூர் த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் இது தொடர்பாக மத்திய மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ- அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது

அந்த வகையில் இந்த வழக்கின் ஒரு பகுதியாக, த.வெ.க தலைவர் விஜய் ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறையும், கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஒருமுறையும் என மொத்தம் மூன்று முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் , தேர்தல் செயல்பாடு நடவடிக்கைகளைகருத்தில் கொண்டு விசாரணையை டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே நடத்த கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்

செந்தில் பாலாஜிக்கும் சி.பி.ஐ சம்மன்

இதற்கிடையில், இதே கரூர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பி இருக்கும் நிலையில் ,அவர் மார்ச் 17-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது .

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in