”நான் கிங் மேக்கர் கிடையாது, KING" : வெற்றி நிச்சயம், விஜய் அதிரடி

TVK Vijay NDTV Interview : சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம், எனக்கு ”கிங் மேக்கர் அடையாளம் வேண்டாம்” என, தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
TVK leader Vijay said victory in assembly elections is certain, does not want the "kingmaker" label
TVK leader Vijay said victory in assembly elections is certain, does not want the "kingmaker" labelSource : TVK Vijay NDTV Interview
1 min read

தவெக தலைவர் விஜய் :

I am not a King Maker, we will Win, TVK leader Vijay NDTV Interview : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்கிறார் நடிகர் விஜய்.

அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

கரூர் சம்பவம் - இன்றளவும் பாதிப்பு

”கரூர் சம்பம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்றளவும் என்னை அந்த நிகழ்வு பாதிக்கிறது, இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று விஜய் வேதனையுடன் தெரிவித்தார்.

எனது எதிர்காலம் அரசியல் தான்

நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்தவகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று முடிவு செய்து விட்டேன் என்று விஜய் குறிப்பிட்டார்.

அரசியலால் ‘ஜனநாயகன்’ நெருக்கடி

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் வரும் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன். எனது படம் அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதற்கு நான் மனதளவில் தயாராகியிருந்தேன். ஆனால், படம் தள்ளிப் போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக நான் வருந்துகிறேன்.

நான் "கிங் மேக்கர்" கிடையாது

அரசியலில் நான் கிங் மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது நான் ஏன் கிங் மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள், உங்களுக்கு உண்மை தெரியும் என்று விஜய் தெரிவித்தார்.

சினிமா to அரசியல் எளிதல்ல

நான் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்துள்ளேன். இனி அரசியல் செய்வது என்று தீர்மானித்துதான் வந்துள்ளேன். இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை.

ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா

அரசியலில் எனது ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். ஷாருக்கானின் தீவிர விசிறி நான் என்றும் விஜய் கூறினார்.

தவெகவுக்கு விசில் சின்னம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது. பொதுச் சின்னம் கிடைத்ததை தவெக தலைவர் விஜய், முதல் வெற்றி என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in