TVK: "அடக்குமுறை விளையாட்டு வேண்டாம்" : திமுக அரசை எச்சரித்த விஜய்

TVK Vijay Slams CM MK Stalin in Nagapattinam Campaign : ’எங்களை மிரட்டி பார்க்காதீங்க, அடக்குமுறை விளையாட்டு வேண்டாம் என்று, திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
TVK Vijay Slams CM MK Stalin in Nagapattinam Campaign
TVK Vijay Slams CM MK Stalin in Nagapattinam Campaign
2 min read

தீவிர பிரசாரத்தில் நடிகர் விஜய் :

TVK Vijay Slams CM MK Stalin in Nagapattinam Campaign : கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி விட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்.

இதற்காக கடந்த 13ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப் ​பயணத்தை விஜய்(Vijay Campaign) தொடங்​கி​னார். தொடர்ந்​து, அரியலூரில் பிரச்​சா​ரம் செய்த விஜய், நள்​ளிரவு நேர​மாகி விட்டதால், பெரம்​பலூர் சுற்​றுப்​பயணத்தை ரத்து செய்​தார். தொண்டர்கள் அதிகமாக வருவதால், வாரம்தோறும் சனிக்கிழமை 2 மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்ய அவர் முடிவு செய்து, அதற்கேற்ப பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூரில் மக்களுடன் சந்திப்பு :

அதன்படி, நாகை, திருவாரூரில் நடிகர் விஜய் இன்று மக்களை சந்திக்கிறார்(TVK Vijay Campaign in Thiruvarur). சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற அவர் அங்கிருந்து கார் மூலம், திருவாரூர் சென்றார். பின்னர் பிரசார வாகனத்தில் நாகை நோக்கி பயணித்த அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

திரண்ட தவெக தொண்டர்கள் :

நாகை புத்​தூர் அண்ணா சிலை சந்​திப்​பில் விஜய் பிரசாரம்(Vijay Campaign Speech) செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. காலை முதலே அங்கு தவெக தொண்டர்கள் திரண்டனர். பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 11 மணி விஜய் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், வழி நெடுகிலும் தொண்டர்களை சந்தித்ததால் 12 மணிக்கு பிறகே அவர் பிரசார களத்தை அடைந்தார்.

நாகையில் விஜய் பிரசாரம் :

நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு பேச வந்து இருப்பதாக தெரிவித்த விஜய், நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பே, மீனவர்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். தமிழக மீனவர்கள் இலங்கையால் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை எடுத்துக் கூறிய அவர், இதற்காக மிக நீண்ட கடிதம் எழுதி விட்டு முதல்வர் ஸ்டாலின்(Vijay on MK Stalin) அமைதியாக உட்கார்ந்து விடுவதாக சாடினார்.

கடல் சார்ந்தும், விவசாயம் சார்ந்தும் நாகை பகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம். வெளிநாடு செல்லும் முதல்வர் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்று விஜய்(Vijay in Nagapattinam) வினவினார்.

மீனவர்கள் தாக்குதல் எப்போது நிற்கும்? :

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் எப்போது நிற்கும், மற்ற மாநில மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று குறிப்பிடும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை பிரித்து பார்ப்பது எதற்காக? ஈழத் தமிழர்கள் உலகின் எந்த முலையில் இருந்தாலும் அவர்களுக்கு குரல் கொடுப்பேன் என்றார் விஜய். இது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோடி, அமித் ஷாவை தடுக்கும் தைரியம் இருக்கா? :

முன்னோற்றத்திற்கான ஆட்சி என்று பேசிப்பேசி காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம், மக்களை சந்திக்க, பிரசாரம் செய்ய வரும் எனக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள், மக்களிடம் நான் பேசினால் உங்களுக்கு எதற்கு பயம், மின்சாரத்தை நிறுத்தறீங்க, நெருக்கடி கொடுக்கறீங்க, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வந்தா, இதேமாதிரி கட்டுப்பாடுகளை விதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கா? என முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பினார்(TVK Vijay Challenge To CM Stalin). அப்படி செய்ய மாட்டீங்க, ஏன்னா, உங்களுக்கு தான் முறைமுக உறவு இருக்கே?

மிரட்டி பார்க்காதீங்க, அஞ்ச மாட்டோம் :

மக்கள் எங்க பக்கம் இருக்காங்க, எங்களை மிரட்டி பார்க்காதீங்க, அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம், உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் வரும் தேர்தலில் போட்டி, வாங்க பார்க்கலாம் என்று விஜய் சவால் விடுத்தார்.

மேலும் படிக்க : ”உங்க விஜய் நான் வரேன்” : நாகை, திருவாரூரில் நாளை பிரசாரம்

என்னை யாராலும் தடுக்க முடியாது :

சனிக்கிழமை மட்டும் பிரசாரம் ஏன் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய், மக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது, அவர்களின் வேலை பாதிக்க கூடாது என்பதற்காகவே இவ்வாறு பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கு. யாராலும் மக்களை நான் சந்திப்பதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது” இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in