

108 இடங்களில் வென்ற தவெக
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சியமைக்க போதுமான இடங்கள் இல்லாமல் தவித்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி
இதில், காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணியில் இணைந்து அடுத்துவர தேர்தல்களையும் எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்துவிட்டது.
கூட்டணியை கட்டமைக்கும் தவெக
இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளைக் கொண்டு தவெக தலைமையிலான புதிய கூட்டணியைக் கட்டமைக்கும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் நாளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது.
தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் விஜய், ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
தேர்தல்களை எதிர்கொள்ள ஆயத்தம்
விரைவில் வரவுள்ள இடைத்தேர்தல் மற்றும் தொடர்ந்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த கூட்டணியை உருவாக்கத் தீவிரம் காட்டுகிறது தவெக எனக் கூறப்படுகிறது.
அனைத்து தோழமை கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
========================