

TVK Shatters Half a Century of Caste and Religious Politics: Chief Minister Vijay Speaks in Trichy!
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த சாதி மற்றும் மத அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உடைத்தெறிந்துள்ளதாக தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி
மாநில முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று (ஜூன் 1) திருச்சிக்கு வருகை தந்த அவர், தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.
அரசியல் மாற்றங்கள் குறித்து முதல்வர் பேச்சு
இதன் ஒரு பகுதியாகத் திருச்சி ஜோசப் கல்லூரியில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அரசியல் மாற்றங்கள் குறித்து முதல்வர் விஜய் பேசியதாவது:
எதிர்க்கட்சியாக செயல்படட்டும்
"திமுக மாடல் ஆட்சியில் ஒவ்வொரு தெருவிலும் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. அண்ணாவால் தொடங்கப்பட்ட பேரியக்கத்தை இன்று ஒரு அடிமை கட்சியாக்கிவிட்டு, 'உடன்பிறப்பே வெளியே வா' என்கிறார் மு.க.ஸ்டாலின்.
மக்களை ஏமாற்றுவதை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்
அவர்களின் தோல்விக்கான காரணத்தை வெளியில் தேடாமல் சொந்த வீட்டிற்குள் தேட வேண்டும் என அவர்களது தொண்டர்களே கூறுகின்றனர். மக்களை ஏமாற்றுவதை விடுத்து திமுக ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும்".
நிதி நெருக்கடியை சரி செய்வேன்
திமுக அரசு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனை முழுமையாக சரி செய்த பின்னரே புதிய களப்பணிகளில் தீவிரமாக இறங்கவுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வளவு பழிகளைப் போட்டாலும்
தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், தன் மீது எவ்வளவு பழிகளைப் போட்டாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உறுதியாக செய்து காட்டுவேன் என்றும் பேசினார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளையும் தனது இரு கண்களாக கருதுவதாக குறிப்பிட்ட முதல்வர் விஜய்,
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களாகிய உங்களில் ஒரு சாமானியரையே வேட்பாளராக நிறுத்தப்போவதாகவும், தன்னை வெற்றி பெற வைத்தது போல, அந்த சாமானிய வேட்பாளரையும் மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
======