
அரசியல் பாதையில் நடிகர் விஜய் :
TVK Vijay 2nd Madurai Madurai Update : தமிழக திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்த அவர், விழுப்புரத்தில் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார். இதன் மூலம் தமிழக அரசியல் கட்சிகளை பீதி கொள்ளச் செய்த அவர், செயற்குழு, பொதுக்குழு என அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மதுரையில் தவெக மாநாடு :
2026ல் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருப்பதால், அதை கருத்தில் கொண்டு மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் 2வது மாநில மாநாட்டை நடத்துகிறது. ஆகஸ்டு 21ம் தேதி இந்த மாநாடு(TVK 2nd Manadu Date) நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
800 அடி நீளத்திற்கு நடைமேடை :
மாநாட்டு திடலில் விஜய் நடந்து வந்து தொண்டர்களை சந்திக்க வசதியாக 800 அடி தூரத்திற்கு (அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர்) நடைமேடை அமைக்கப்படுகிறது. மாநாட்டு மேடை 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. நடைமேடை மூலம் நடந்து சென்று விஜய்(TVK Vijay) தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெறுவார். மாநாட்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்களும், 25 பெண்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை அன்றைய தினம் வேறுபடலாம்.
கர்ப்பிணிகள், குழந்தைகள் வரத்தடை :
மாநாட்டை ஒட்டி சில கட்டுப்பாடுகளையும் தமிழக வெற்றிக் கழகம் விதித்து இருக்கிறது. அதன்படி, மாநாட்டிற்கு வர கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. அதேபோன்று, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் யாருக்கும் பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : TVK 2nd Manadu : மதுரை தவெக மாநாட்டு தேதி : ஆகஸ்டு 21க்கு மாற்றம்
மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு, அதற்கு ஏற்றவாறு பணிகளை செயல்படுத்தி வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மதுரையில் முகாமிட்டு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
======