”கபட நாடக அரசு, யாருக்காக இந்த ஆட்சி?” : தவெக தலைவர் விஜய் ஆவேசம்

TVK Vijay on North Indian Attack : மின்சார ரயிலில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் விஜய், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை விமர்சித்துள்ளார்.
TVK Vijay condemned incident youth was attacked in Tiruttani Electric train, criticized DMK government for failing to control the circulation of drugs
TVK Vijay condemned incident youth was attacked in Tiruttani Electric train, criticized DMK government for failing to control the circulation of drugs
1 min read

இளைஞர் மீது கொடூர தாக்குதல்

TVK Vijay Condemns DMK on North Indian Attack in Tiruttani Electric Train : சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில், ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலம் பற்றி அச்சம்

இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், ” சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், இளைஞரை கொடூரமாக தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தவறான பாதையில் இளைஞர்கள்?

இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாக விஜய் விமர்சித்துள்ளார்.

கபட நாடக அரசு - விஜய்

ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள விஜய், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது.

அரசிடம் திட்டங்கள் இல்லையா? - விஜய்

தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்?" என திமுக அரசிற்கு விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அந்த பதிவில் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in