ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார் : TVK-வுக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு : நாளை பதவியேற்பு!

நாளை காலை 11.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது.
TVK Vijay Meets Governor, Stakes Claim to Form Government: Backed by 113 MLAs; Swearing-in Tomorrow!
TVK Vijay Meets Governor, Stakes Claim to Form Government: Backed by 113 MLAs; Swearing-in Tomorrow!source:google
1 min read

TVK Vijay Meets Governor, Stakes Claim to Form Government: Backed by 113 MLAs; Swearing-in Tomorrow!

தவெக தலைவர் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருடன் சந்திப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தவெக 108 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 11 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு

இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் 10 ஆண்டுகாலமாக நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது.

ஆளுநர் சந்திப்பில் விஜய் மற்றும் தவெகவினர்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பனையூரில் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,, காங்கிரஸ் நிர்வாகிகள், கிரிஸ் சோடங்கர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் விஜயை சந்தித்து ஆதரவு கடிதத்தையும் வழங்கினர்.

முன்னதாக ஆளுநருக்கு முன்னஞ்சல் அனுப்பிய விஜய்

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தமிழக ஆளுநருக்கு தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அழைப்பு விடுக்குமாறு மின்னஞ்சல் அனுப்பிய நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்தித்தார்.

தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம்

ஆளுநர் சந்திப்பின் போது, தவெகவின் 108 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் மற்றும் காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவளித்த நிலையில் காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் சேர்த்து 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு

இதைத்தொடர்ந்து நாளை காலை 11.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது.

இன்னும் 6 எம்எல்ஏக்கள்

எனினும்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை எனும் பட்சத்தில் விசிக, கம்யூனிஸ்ட் என எந்த கட்சிக்கு தவெகவுடன் இணையும் ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in