
தமிழக வெற்றிக் கழகம் :
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி பயணித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்தி, கொள்கைகளை வெளியிட்டார்.
அரசியலில் விஜய் தீவிரம் காட்டினாலும், எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமே அவரது இலக்காக இருக்கிறது. கட்சி மாநாடு, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் என அவரது பயணம் சீராக இருக்கிறது.
முதல்வர் வேட்பாளராக விஜய் :
மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுகவை விமர்சித்து அரசியல் செய்து வரும் விஜய், முதல்வர் வேட்பாளராகவே தேர்தலை சந்திப்பார் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும்.
தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளையும் தவிர்த்து வேறு யாராலும் ஆட்சி அமைப்பது என்பது கனவாகவே இருக்கிறது.
ஆட்சியில் பங்கு நனவாகுமா? :
அதேசமயம் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆட்சியில் பங்கு என்ற ஒன்றை எதிர்பார்க்கின்றன. ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒற்றைக் கட்சி ஆட்சியை இருந்து வருகிறது.
இவற்றுக்கு எல்லாம் மாற்றமாக விஜய் கட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து வேகம் எடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தில், இதுவரை ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
2 கோடி உறுப்பினர்கள் இலக்கு :
இதை 2 கோடியாக உயர்த்துவதே விஜய் இலக்காக உள்ளது. அதற்கு ஏற்றார் போன்று, வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குழுக்களை அமைத்து பணிகளை முடுக்கிவிட விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் குழுக்கள் மூலமும் கட்சிகளை பணிகளை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டு உள்ளார்.
====