
அரசியல் களத்தில் தவெக :
TVK Vijay 2nd Madurai Manadu Update : தமிழக அரசியல் களத்தில் புதிதாய் நுழைந்தாலும், நாளும் பேசுபொருளாகி வருகிறது தமிழக வெற்றிக் கழகம். இதற்கு முக்கிய காரணம் கட்சி தலைவர் விஜய் தான். திரையுலகில் கொடி கட்டி பறக்கும் அவர், அரசியலில் கால் பதித்து 2026ல் தவெக ஆட்சி என்ற உறுதியுடன் களமாடி வருகிறார்.
மதுரை தவெக மாநாடு :
இதை வலிமைப்படுத்தும் வகையில் வரும் 21ம் தேதி மதுரையில்(TVK 2nd Manadu Date & Place) தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநால மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு, அடுத்து சுற்றுப் பயணம், மக்களோடு சந்திப்பு, தேர்தல் பிரசாரம் என படுவேகமாக தயாராகி வருகிறார் டிவிகே விஜய்(TVK Vijay).
தடைகளை தகர்த்து நடைபோடுகிறோம் :
மதுரை மாநாடு(Madurai Manadu) குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிவிகே விஜய், “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு(TN Assembly Election 2026) நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம். இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை மதுரை(TVK 2nd Madurai Madurai Location). பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.
கொள்கை எதிரி, அரசியல் எதிரி :
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு :
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் டிவிகே விஜய் தெரிவித்துள்ளார்.