”ஓம் சக்தி பராசக்தி, திமுக தீயசக்தி” : எலக்சன் இல்லை, எமோஷன், விவசாயியாக பிறக்க ஆசை : தஞ்சையில் விஜய்!

TVK Vijay Speech in Thanjavur Meeting : நடைபெற இருப்பது எலக்சன் இல்லை, எமோஷன், தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
TVK Vijay said in Thanjavur Meeting coming is not an election 2026, but emotion, no one can stop TVKs victory
TVK Vijay said in Thanjavur Meeting coming is not an election 2026, but emotion, no one can stop TVKs victorySource : Google
2 min read

தவெக நிர்வாகிகள் கூட்டம்

TVK Vijay Speech in Thanjavur Meeting : தஞ்சை அருகே செங்கிப்பட்டி என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சேலம் மற்றும் வேலூரை தொடர்ந்து, தஞ்சையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழ்நாடு தான் விஜய்

”தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு” என்று வேலூரில் சொல்லி இருந்தேன். அதற்கு காரணம் மக்கள் பக்கம் உண்மையாக நிற்பது தவெக என்பதால் தான்.

வாக்கு அரசியல் இனி எடுபடாது

வரும் தேர்தல் விஜய் vs ஸ்டாலின் என்றும் சொல்லி இருந்தேன். விஜய் பாஜகவிற்காக பேசுகிறார்கள் என்று, பேச ஆரம்பிச்சு விட்டாங்க. சிறுபான்மையினரை பயமுறுத்தி, பயமுறுத்தி வாக்கு கேட்கறது இனி நடக்காது.

டெல்லிக்கு வெள்ளைக்குடை - யார் பிடிப்பது

டெல்லிக்கு எதிராக போராடுவதை போல காட்டிக் கொள்வது, வழக்கு என்று வந்து விட்டால் டெல்லிக்கு வெள்ளைக்குடைி பிடிப்பது யார் என்று எல்லாருக்கும் தெரியும். நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தேர்தலில் தவெக அனைத்தையும் அடித்து நொறுக்கும். வர இருக்கும் தேர்தலில் திமுக விசில் போடும். இதில் சந்தேகமா வேண்டாம். எனக்கும் தமிழக மக்களுக்கும் எனக்குமான உறவு, தந்தை மகன் உறவு,

தமிழ்நாடு அணி - அரசியல் வேண்டாம்

தமிழ்நாட்டு அணி, டெல்லி அணின்னு சிலர் பேசுறாங்க! கிரிக்கெட்டில் உள்ள தமிழ்நாட்டு அணியை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது. அதற்கு உதாரணம் தான் சிஎஸ்கே.

இது எலெக்சன் இல்லை, எமோஷன்

எனக்கு நீங்கள் ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீங்க தானே. எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது.

அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.

ஒவ்வொரு வீட்டிலும் விசில் ஒலிக்கும்

ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் புயலாக ஒலிக்கும் தானே. நன்றி, நன்றி... வரலாற்று உண்மையான சமூக நீதி ஆட்சியை நாம் அமைப்போம்.

ஊழலற்ற உண்மையான சமூக நீதி ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதிமொழியை தருவீர்களா? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா?

கடவுளுக்கே படையல் போடும் விவசாயிகள்

கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் தான் விவசாயிகள். இந்த பூமியை சாமியாக்குவதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு இருக்கு. எனக்கு அடுத்த ஜென்மம் பற்றி தெரியாது. அப்படி இருந்தால் அடுத்த ஜென்மத்தில் விவசாயி மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்.

விவசாயியாக பிறக்க ஆசை

எனக்கு விவசாயிகள் பத்தி முழுமையாக தெரியாது. ஆனால், அங்க படுற கஷ்டம் நல்லா தெரியும். எனவே தான் பரந்தூர் விவசாயிகளுக்கு குரல் கொடுத்தேன்.

நிலத்தடி நீர் தமிழகத்தில் திவாலாகி வருது. இதற்கு மணல் கொள்ளை முக்கிய காரணம். ஆளுங்கட்சி இதை சரியாக கையாளவில்லை என்று நீதிமன்றமே சொல்லி இருக்கு. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்டது திமுக, இதை யாரும் மறக்க மாட்டாங்க என்று விஜய் பேசினார்.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in