பெரியார் பிறந்தநாளில் சுற்றுப்பயணம் : மக்களை சந்திக்கிறார் விஜய்!

TVK Vijay Election Campaign Tour Date on Periyar Birthday : தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மக்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.
TVK Leader Vijay Election Campaign Tour Date 2025 on Periyar Birthday
TVK Leader Vijay Election Campaign Tour Date 2025 on Periyar Birthday
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 :

TVK Vijay Election Campaign Tour on Periyar Birthday : தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. அதற்கு 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி :

திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அங்கேய நீடிக்கின்றன. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்போம் என்று அறிவித்துள்ளது. அதேபோல தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என்றே தெரிகிறது. தேமுதிக, பாமக கட்சிகள் எந்த அணிக்கு செல்லப் போகின்றன என்பது உறுதியாகவில்லை. ஜனவரிக்கு பிறகு இந்தக் கட்சிகளின் கூட்டணியுர் தெரிய வரும்.

மாநாடு வெற்றி, உற்சாகத்தில் விஜய் :

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். எனவே, சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்த கட்டத்தை நோக்கி தவெக வேகமாக நகர்ந்து வருகிறது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்திற்கு விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

செப்.17 முதல் சுற்றுப் பயணம் :

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி(TVK Vijay Election Campaign Date) ஈரோட்டில் முதல் மக்கள் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி மூலம் விஜய் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

தயாராகும் பிரச்சார வாகனம் :

பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சுற்றுப் பயணம்(TVK Vijay Tour) குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. விஜய் சுற்றுப் பயணம் செல்வதற்காக பிரத்யேக வாகனம் தயார் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் :

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஜூலை 7ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பாமக தலைவர் அன்புமணி, ’உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற பெயரில் வட மாவட்டங்களில் பரப்புரை பயணங்கள் நடத்தி வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி, இல்லம் நாடு’ என்ற பெயரில் பயணம் நடத்தி வருகிறார். அந்த பட்டியலில் விஜய் இணைந்து மக்களை சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க : "Uncle, Uncle" அணில் ஏன் கத்துகிறது? : விஜய்யை கலாய்த்த சீமான்

குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி :

பொதுமக்களை விஜய் சந்திப்பதில்லை, மக்கள் பிரச்சினைக்காக போராட முன்வருவதில்லை, என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது சுற்றுப் பயணத்தை அவர் தொடங்க உள்ளார். எனவே, செப்டம்பர் 17ம் தேதிக்கு(Vijay Election Campaign Date) பிறகு விஜய்யின் அரசியல் தீவிரமாக இருக்கும். திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை கூர்மைப்படுத்தி, வாக்குகளை ஈர்க்கும் வகையில் அவர் பிரசாரம் இருக்கும் என்கின்றனர் தவெக. நிர்வாகிகள்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in