தீபத் தூணில் ”தீபம் ஏற்றுங்கள்”: நீதிபதிகள் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் தான் எனவே, தீபம் ஏற்ற தடையில்லை என்று, இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பினை வழங்கி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
two-judge bench dismissed Tamil Nadu government's appeals,ordered Thiruparankundram hill, as it is a pillar of light
two-judge bench dismissed Tamil Nadu government's appeals,ordered Thiruparankundram hill, as it is a pillar of lightGoogle
2 min read

தீபத் தூணில் தீபம் - தனி நீதிபதி உத்தரவு

Thiruparankundram Deepam Issue Case : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக அரசு மேல்முறையீடு

இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

டிசம்பர் 18 ம் தேதி விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகளின் உத்தரவு விவரம்

* திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத் தூண் உள்ளது.

* தீபத் தூணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது, அபத்தமானது.

* தமிழக அரசு அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

• திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

• திருப்பரங்குன்றம் மலையின் மேல் இருப்பது தீபத்தூண் தான்.

• தீபத்தூணில் கோயில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும்.

* தீபம் ஏற்றும் நிகழ்வை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை செய்ய வேண்டும்.

• திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்ற வதம் சிறுபிள்ளைத்தனமானது.

• திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதிக்கு சீர்குலைக்கும் என்ற வாதமும் அபத்தமாக இருக்கிறது.

• திருப்பரங்குன்றம் மலையில் மிக உயரத்தில் இருக்கும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நியாயமானது.

• திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை நிராகரிக்க தேவஸ்தானம் கூறும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை.

• திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்றால், அதற்கு தமிழக அரசுதான் காரணமாக இருக்க வேண்டும்.

• அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் நிலைக்குச் செல்லக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

• திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணமாக இருக்க வேண்டும்.

• திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது அரசு அதிகாரிகள் தங்கள் வாதத்திற்காக உருவாக்கிய கற்பனையான அம்சம்.

* தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

* திருப்பரங்குன்றம் வழக்கு தேவையின்றி அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.

* மதுரை மாவட்ட நிர்வாகம் தேவையின்றி பிரச்னையை உருவாக்கியுள்ளது.

* தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது.

இவ்வாறு இரு நீதிபதிகள் அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in