மீண்டும் தனி நீதிபதி கையில் ‘ஜனநாயகன்’ : உடனே ரிலீசாக வாய்ப்பில்லை

Jana Nayagan Censor Issue Case Judgement in Tamil : விஜயின் ‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கில் மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்து இருக்கிறது.
two-judge bench has ruled to re-hear the censorship case of Vijay's film 'Jananayakan' by a single judge
two-judge bench has ruled to re-hear the censorship case of Vijay's film 'Jananayakan' by a single judgeSource : Google
1 min read

விஜயின் ‘ஜனநாயகன்’

Jana Nayagan Censor Issue Case Judgement in Tamil : தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜயின் கடைசி படம் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது.

உயர் நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’

இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.

சென்சார் போர்டு மேல்முறையீடு

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம், தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது. இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றது.

நீதிமன்றத்தில் காரசார வாதம்

திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை முதல் வழக்காக தீர்ப்பினை வாசித்தது.

தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு

தனி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, இரு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஜனநாயகன் திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அவர்கள் ரத்து செய்தனர்.

உடனே விசாரிக்க உத்தரவு

தனி நீதிபதி விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், தணிக்கை வாரிய தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழுவினர் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

எப்போது ரிலீஸ்?

தனி நீதிபதி ஆஷா மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதால், இப்போதைக்கு ஜனநாயகன் படம் ரிலீசாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in