வருமான வரித்துறை விசாரிக்க நோட்டீஸ்
வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான அனைத்தும் முரண்பட்டதாக இருப்பதாக கூறி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல வழக்கு தொடர்ந்திருந்தார்
தாக்கல் செய்யப்பட்ட மனு
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது ,உதயநிதி ஸ்டாலின் 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், தற்போதைய தேர்தல் மனுவில் அந்த விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான விளக்கம் இல்லை
இந்த பரிவர்த்தனை தொடர்பாக முறையான விளக்கங்கள் வேட்புமனுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடந்த 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறுவனத்துக்கு கடன்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், தற்போது ரூ. 10 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய ரூ. 1 கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டு வி்ட்டதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
சொத்து முரண்பாடு
மேலும் அவர் வேட்புமனுவில் 2020-ம் ஆண்டுக்கு முன்பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுயிருக்கிறார்.
ஆனால், தற்போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்புக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. தனக்குள்ள சொத்துகள் குறித்து முரண்பாடான தகவல்களை வேட்பாளர்கள் வேட்புமனுவில் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்
வருமான வரித்துைறை விசாரணை செய்ய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நநீதிமன்ற நீதிபதி அமர்வு , சொத்து முரண்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் , வருமான வரித்துறை இதனை விசாரித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை
இந்த சொத்து ,முரணப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை செய்யப்படும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
=======