”திருத்தங்களோடு மறுவரையறை மசோதா" : மத்திய அமைச்சரவை ஒப்புதல் : 50% இடங்கள் அதிகரிக்கும், 25 ஆண்டுகள் மாற்றமில்லை!

தொகுதி வரையறை மசோதாவை திருத்தங்களோடு தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
Union Cabinet has approved the introduction of the Delimitation Bill, with amendments
Union Cabinet has approved the introduction of the Delimitation Bill, with amendmentssource:thamizhalai,ai generated
1 min read

மத்திய அமைச்சரவை கூட்டம்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியது. பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒப்புதல்

அதன்படி இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.. நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் மீண்டும் கூட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இன்று இந்த மசோதாவுக்கு மோடி அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது..

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் உள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 50% அதிகரிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்காமல் தனித்து வைக்கவும், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கவும் அமைச்சரவை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும்

இதன் மூலம் தற்போதுள்ள 543 லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும், இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது; மசோதாக்கள், பிற அரசு அலுவல்கள் குறித்த விவாதங்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், எம்பிக்களும் பங்கேற்க வேண்டும்.

அரசின் முடிவுகளை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ எம்பிக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பார்லி சிறப்புக் கூட்டத்தொடரை மிகுந்த பொறுப்புணர்வுடன் நடத்துவது நமது கடமையாகும், இவ்வாறு கூறினார்.

=================